தேசிய அறிவுசார் ஆணையம்
இந்திய அரசு
  


புது
इंडिया एनर्जी पोर्टल
इंडिया वॉटर पोर्टल
புது பரிந்துரைகள்

  भाषा
  English
  हिन्दी
  বাংলা
  മലയാളം
  অসমীয়া
  ಕನ್ನಡ
  ارد و
  नेपाली
  মণিপুরী
  ଓଡ଼ିଆ
  ગુજરાતી
முக்கியப் பரப்புகள் | எழுத்தறிவு

எழுத்தறிவு

தேசிய எழுத்தறிவு இயக்கம் 1998 இல் தொடங்கப்பட்டது. அதன் குறிக்கோள் 2007 ஆம் ஆண்டிற்குள் 15-35 வயதிற்கு உட்பட்டவர்களில் 75 சதவிகிதத்தினரை எழுத்தறிவு பெற்றவர்களாக உருவாக்கவேண்டும் என்பது. மக்கள் இயக்கம் மூலமாகக் கலாச்சாரம் மற்றும் சமூக நிகழ்வுகளோடு எழுத்தறிவு திட்டம் பரவலாக்கப்பட்டு மக்களுக்குக் கல்வியறிவையும் விழிப்புணர்வையும் கொடுக்க முயல்வது. 2001 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி கல்வியறிவு பெற்றோரின் எண்ணிக்கை 1991 ஆம் ஆண்டில் 52.21% ஆக இருந்து 65.38% ஆக உயர்ந்தது தெரியவந்தது. முதல் முறையாக இந்தப் பத்தாண்டுகளில் எழுத்தறிவு பெறாதோர் எண்ணிக்கை 329 மில்லியனில் இருந்து 304 மில்லியனாகக் குறைந்தது. ஆயினும் தேசிய சராசரி விகிதாச்சாரம் அளவுகடந்தது. இந்த வேறுபாடு தோன்றுவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. மதம், சாதி, பால் பாகுப்பாடு ஆகியவைத் தொடர்ந்து பிரச்சனைக்குரிய காரணங்களாகக் காணப்படுகின்றன. மேலும் கல்வியறிவு அற்றவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அளவுகடந்து அதிகரித்து வருகிறது. அறிவுப்பாதையில் முன்னேறிக்கொண்டிருக்கும் எந்தவொரு நாடும் கனிசமான அளவு கல்வியறிவு அற்றவர்களாக இருப்பதை அனுமதிக்காது.

தேசிய அறிவுசார் ஆணையத்தின் கவனத்தில் உள்ள சில பிரச்சினைகள்:
  • தேசிய எழுத்தறிவு இயக்கத்தின் மறு மதிப்பீடு
  • எழுத்தறிவு தொடக்கமாக பல்-முனை அணுகு முறையைப் பயன்படுத்துதல். ICT போன்ற நவீன உத்திகளையும் கணினித் தொழிற்நுட்பத்தையும் பயன்படுத்தி எழுத்தறிவை வளர்த்தல்.
  • கல்வி உபகரணங்களின் வளர்ச்சி மற்றும் பயிற்சி
  • நவீன கோட்பாடுகளும் அதனைச் சார்ந்த எழுத்தறிவின் புதிய தொடக்கமும்
  • முறைசார்க் கல்வி மற்றும் முறைசாராக் கல்வியின் சமநிலை

More Literacy links: அறிவுரைகள்