தேசிய அறிவுசார் ஆணையம்
இந்திய அரசு
  


புது
इंडिया एनर्जी पोर्टल
इंडिया वॉटर पोर्टल
புது பரிந்துரைகள்

  भाषा
  English
  हिन्दी
  বাংলা
  മലയാളം
  অসমীয়া
  ಕನ್ನಡ
  ارد و
  नेपाली
  মণিপুরী
  ଓଡ଼ିଆ
  ગુજરાતી
முக்கியப் பகுதிகள் | மொழி

மொழி

இந்தியா போன்ற பலமொழிகள் பேசும் நாட்டில், மொழி என்பது தகவல் தொடர்புக்காவோ பயில்வதற்காவோ மட்டுமல்லாது செயல்பாடுகளைத் தீர்மானிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. வளர்ந்து வருகின்ற ஆங்கிலமொழியின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். ஏன்னெனில் ஆங்கிலமொழி உயர்கல்வி பெறுவதற்கும் வேலைவாய்ப்பிற்கும் சமுதாய வளர்ச்சிக்கும் மிக முக்கிய பங்குவகிக்கிறது. பள்ளிக்கூடத்தை விட்டு வெளியேறும் மாணவர்கள் போதிய ஆங்கில பயிற்சியின்மையால் அவர்கள் உயர்க்கல்வி உலகில் போட்டியிட இயலாதவர்களாக இருக்கிறார்கள். மேலும் அவர்கள் ஆங்கிலம் நன்கு தெரியாத காரணத்தால் சிறந்த கல்வி பயிலும் மாணவர்களோடு போட்டியிட இயலவில்லை. போதிய ஆங்கில கல்வியறிவு இன்மையால் தொழில் சார்ந்த வேலைகளிலும் அலுவலக வேலைகளிலும் வாய்ப்பில்லாத போவது மட்டுமின்றி உலக அளவில் முன்னேற முடியாமல் போகிறது.

இத்தகைய சூழலில் தேசிய அறிவு ஆணையம் ஒரு சாதாரண முறையிலான கலந்தாய்வைப் பல்வேறு தரப்பினருடன் மேற்கொண்டது. அவை: கல்வியாளர்கள், தகவல் தொடர்பாளர்கள் மற்றும் தொழிலதிபர்கள். மாநில முதலமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மருத்துவம், சட்டம், சமூக அமைப்புகளின் உறுப்பினர்கள் போன்றவர்களுடன் ஆங்கிலத்தை நவீன உத்தியுடன் எவ்வாறு கற்பிப்பது என்பது குறித்து ஆணையம் ஒரு பணிக்குழுவை நியமித்துள்ளது. இப்பணிக்கு அளித்த அறிக்கையின் அடிப்படையில் தேசிய அறிவு ஆணையம் விரிவான கலந்தாய்வு செய்து ஆங்கிலக் கல்வியைப் பரவலாக்குவது குறித்த பரிந்துரைகளை அனுப்பியுள்ளது. இப்பரிந்துரைகள் ஆங்கிலமொழியின் அறிமுகம், கற்பித்தல், பயிற்றுவிப்பதற்குரிய போதிய பாடப்புத்தகங்கள், ஆசிரியர் பயிற்சி, ஆசிரியர் மற்றும் பாடநூல்களின் பண்பாடு, மொழிக்கற்றலில் ICT யின் பயன் போன்றவைகளுடன் தொடர்புடையன.


More Language links: பரிந்துரைகள்