தேசிய அறிவுசார் ஆணையம்
இந்திய அரசு
  


புது
इंडिया एनर्जी पोर्टल
इंडिया वॉटर पोर्टल
புது பரிந்துரைகள்

  भाषा
  English
  हिन्दी
  বাংলা
  മലയാളം
  অসমীয়া
  ಕನ್ನಡ
  ارد و
  नेपाली
  মণিপুরী
  ଓଡ଼ିଆ
  ગુજરાતી
முக்கியப் பகுதிகள் | பொறியியல் கல்வி

பொறியியல் கல்வி

இந்தியா 2005 ஆம் ஆண்டு மொத்தம் 415,000 பொறியாளர்களை உருவாக்கியுள்ளது. ஆச்சர்யமாக இருந்தாலும் கிட்டத்தட்ட இது போதுமானதாகும். இப்பொழுது தேவையான எண்ணிக்கையில் பொறியாளர்களை உருவாக்க வேண்டியுள்ளது. வரும் இருபது ஆண்டுகளில் இந்தியா உற்பத்தி மற்றும் பொறியியல் சேவைகளில் மிகச் சிறந்த வாய்ப்புக்களை எதிர்நோக்கியுள்ளது. எனவே, தரமான பொறியாளர்களை உருவாக்குவதும் பொறியாளர்களின் எண்ணிக்கையை உயர்த்துவதும் அவசியமானதாகும்.

குறிப்பிட்ட சில சிறந்த நிறுவனங்களைத் தவிர இந்தியாவில் தொழிற்நுட்ப கல்வியானது நடைமுறைக்கு ஒத்து வராமலும் தொடர்பில்லாமலும் இருக்கின்றன. அதிகமான பட்டதாரிகள் திறமையற்றவர்களாகவும் மேன்மையடையாமலும் இருக்கிறார்கள். இதனால், தொடர்புத் துறையில் குறிப்பிட்ட வளர்ச்சியடைய முடியவில்லை. மேலும் பெரும்பாலான நிறுவனங்கள் மற்றும் தரமான நிறுவனங்களும் கூட ஒரு தரமான பணியாளரை உருவாக்க முடியவில்லை. இதனால் தொழில் நுட்பம்/ பொறியியல் கல்வியில் முக்கிய வாய்ப்பை இழக்கிறது. NKC கீழ்க்கண்ட காரணிகளைப் பரிசோதிக்கும்.
  • பாடம் பயிற்றுவித்தல் வச்திகள் மற்றும் நிர்வாகம் தொடர்பான பிரச்சனைகளைச் சமாளித்தல்
  • திறமையானவர்களைத் தக்க வைத்துக் கொள்ளவும், கவர்ந்திருக்கவும் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள்
  • தொழில்த் துறையில் ஆய்வுகள் மேம்படுத்தலுக்கான அளவுகோள்கள்
  • தன்னாட்சிப் பிரச்சனைகள் மற்றும் கணக்குக் கொடுக்கும் பொறுப்புள்ள நிர்வாகங்கள்
புதுமையான முறைகளைக் கையாண்டு மேலாண்மைக் கல்வியைச் சிறந்த முறையிலே வளர்க்க வேண்டும். அது சமூகத்தில் பரந்துபட்ட முறையில் பயன்பாட்டில் உள்ளன.