தேசிய அறிவுசார் ஆணையம்
இந்திய அரசு
  


புது
इंडिया एनर्जी पोर्टल
इंडिया वॉटर पोर्टल
புது பரிந்துரைகள்

  भाषा
  English
  हिन्दी
  বাংলা
  മലയാളം
  অসমীয়া
  ಕನ್ನಡ
  ارد و
  नेपाली
  মণিপুরী
  ଓଡ଼ିଆ
  ગુજરાતી
முக்கியப் பகுதிகள் | மின் நிர்வாகம்

மின் நிர்வாகம்

மின் நிர்வாகம் ஒரு வளமான தகவல் களஞ்சியமாகும். இது எளிமையாகவும் பல்வேறு விதங்களில் மக்களுடன் ஊடாடுகிறது. இது அதிவேகம் கொண்டதாகவும் உற்பத்தி மற்றம் தரமான சேவைகளை மக்களிடம் கொண்டு செல்வதாலும் பொதுமக்கள் பெரிதும் பயனடைகிறார்கள்.

மின் நிர்வாகத்தால் மக்களுக்கு கிடைக்கும் சில பயன்கள்
  • குறைந்த செலவில் தரமான விரைவான மக்கள் சேவை
  • நேரத்தையும் செலவையும் குறைத்தல்
  • குடிமக்கள் அதிகாரம் பெறுதல், தெளிவான தன்மையை வழங்குதல்
  • அதிக உற்பத்திக்கும் தரத்திற்கும் நிகழ்வுகளில் அறிவியலைப் பயன்படுத்துதல்.
தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழிற்நுட்ப அமைச்சர், திட்டக்குழு ஆணையம், போன்றவர்களால் ஆலோசிக்கப்பட்டது. மேலும் நிர்வாக ஆணையம் மற்றும் பங்குச்சந்தை உரிமையாளர்கள், மத்திய மற்றும் மாநில அளவில் மின்நிர்வாகம் பற்றிய தொடர் கலந்துரையாடல் மற்றும் மறுபார்வைக்குப் பிறகு தேசிய அறிவுசார் ஆணையம் மின் நிர்வாகம் தொடர்பான ஒரு குழுவை அமைத்தது. இந்தக் குழுவின் கருத்துக்களின்படி பல கலந்துரையாடல்கள் நடைபெற்றன. இந்தக் கலந்துரையாடலின் அடிப்படையில் இந்த ஆணையம் மின் நிர்வாகம் பற்றிப் பிரதம மந்திரியிடம் 2006 ஆம் ஆண்டு 6 ஜனவரி மாதம் அறிக்கை ஒன்றை ஒப்படைத்தது. மேலும் அவற்றை 2006 ஆம் ஆண்டு மே மாதம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

இந்த ஆணையத்தின் அறிக்கையால் தெரியவருவது, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பமும் உள்கட்டமைப்புக்கான நிர்வாக வாய்ப்புகள் அதிகமாக வழங்கப்பட்டன. கீழ்க்கண்ட காரணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. முதலில் அரசு தொழிற்நுட்பத் துறையில் சில மாற்றங்கள் மற்றும் அரசின் நிகழ்வுகளை முதலில் எளிமையானதாக அனைவரும் அறிந்து கொள்ளதக்க வகையில் உற்பத்தித் திறன் மிக்க துல்லியமானதாக மாற்றியமைக்கப்பட வேண்டும்.
  • அரசின் நிகழ்வுகளை முதலில் எளிமையானதாக அனைவரும் அறிந்துகொள்ளத்தக்க வகையில் இருக்க வேண்டும். அவை உற்பத்தித் திறன்மிக்க துள்ளியமானதாக மாற்றியமைக்க வேண்டும்.
  • பத்திலிருந்து இருபது முக்கியமான சேவைகள், ஒரு புரட்சிகரமான மாறுதலை வழங்க வேண்டும். அதனை எளிமையான முறையில் இணையத்தளத்தில் வழங்கவேண்டும்.
  • மின் நிர்வாக அமைப்பிற்கு ஒரு பொதுவான நிலையும் விதிமுறையும் அளிக்கப்பட வேண்டும்.
  • (பாரத் நிர்மன்,கிராம வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டம்) இது போலப் புதிய திட்டங்களை நல் மின்நிர்வாக மற்றும் இணையத்தளம் மூலம் தொடங்க வேண்டும்.
தேசிய மின்நிர்வாகம் வெற்றிகரமாகத் தன்னிச்சையாகச் செயல்படக் கூடிய மத்திய நிர்வாகத்தில் இருந்த போதிலும், இயக்கம் ஒன்றை உருவாக்கவது மிகவும் கடினமாது. ஒரு இயக்கம் முழுமையான அனைத்துப் பிரிவுகளையும் உள்ளடக்கியதாக அமைக்க வேண்டும். அந்த இயக்கம் எப்படி இருக்க வேண்டும் என்றால் அரசு தொழிற்துறைகளைப் புதிய திட்டத்துடன் மாற்றி அமைக்கவேண்டும். தன்னாட்சி மற்றும் வளைந்துக் கொடுக்கும் தன்மை, தெளிவான நோக்கம், ஆரோக்கியமான முன்னேற்றம், பலமுறை ஆராய்தல் போன்ற செயல்பாடுகள் மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்குள் நடைமுறைபடுத்த வேண்டும்.